மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பிரசாரத்தில் ஊர்வலமாக பங்கேற்பு
12-Jul-2025
அரூர், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரித்து வைத்திருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில், அக்கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு, சவுந்தரராசன், வேடம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில், கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* காரிமங்கலம், தி.மு.க., கட்சி அலுவலகம் முன்பு, மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள், கண்ணபெருமாள், கோபால், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., மாவட்ட பொருளாளர் மாரியப்பன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் தங்கதுரை மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
12-Jul-2025