மேலும் செய்திகள்
இ.பி.எஸ்.,ஐ வரவேற்க திரளாக பங்கேற்க அழைப்பு
11-Aug-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மேற்கொள்கிறார். அதன்படி, மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய, 3 சட்டசபை தொகுதிகளில், இன்று (11ம் தேதி), நாளை (12ம் தேதி), மாலையில் கிருஷ்ணகிரியிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக இன்று மதியம், 3:40 மணிக்கு வரும் இ.பி.எஸ்.,க்கு, மாவட்ட எல்லை காடுசெட்டிப்பள்ளியில், கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மாலை, 4:10 மணிக்கு மக்கள் மத்தியில் பேசுகிறார்.மாலை, 5:00 மணிக்கு, கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், 5:30 மணிக்கு தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் பேசுகிறார். அங்கிருந்து ஓசூர் வரும் இ.பி.எஸ்.,சிற்கு, மத்திகிரி கூட்ரோட்டில் மாலை, 6:30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகிலும், 9:00 மணிக்கு, சூளகிரி ரவுண்டானாவிலும் பேசுகிறார். இரவு, 10:00 மணிக்கு மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை, 8:00 மணிக்கு, ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டில் கட்டியுள்ள மேற்கு மாவட்ட, கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். காலை, 8:30 மணிக்கு, ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்.காலை, 10:30 மணிக்கு, ஓசூர் ஹில்ஸ் ஓட்டலில், சிறு, குறு தொழில் நிறுவன பிரநிதிகளுடன் சந்திப்பு நடக்கிறது. 11:00 மணிக்கு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். 11:30 மணிக்கு, வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகளுடன் சந்திப்பு, நண்பகல், 12:00 மணிக்கு பில்டர் ஓனர்ஸ் அசோசியேஷன் மற்றும் நியமன தேர்தலில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு, முக்கிய விருந்தினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து உரையாடுகிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், மாலை, 5:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அருகே நடைபயணம் மேற்கொள்கிறார். 5 ரோடு ரவுண்டானாவில் மக்கள் மத்தியில் பேசுகிறார். இரவு, 7:30 மணிக்கு, பர்கூர் பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 8:30 மணிக்கு ஊத்தங்கரை எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும் பேசவுள்ளார். ஏற்பாடுகளை துணை பொது செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, தொகுதி பொறுப்பாளர் பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
11-Aug-2025