சுயஉதவி குழுவினருக்கு ரூ.1.72 கோடியில் கடனுதவி
தர்மபுரி, சென்னை கலைவாணர் அரங்கில், சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கினார். இதை தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சதீஸ், மாவட்ட அளவிலான, 10 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 172.04 லட்சம் ரூபாய் அளவிற்கு, சிறப்பு வங்கி கடன் உதவிகளை வழங்கினார். இதில் தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.