உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளில், மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அப்போது, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிக்கொண்டு, தர்மபுரி--கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பினார். இதையடுத்து, 4 யூனிட் களிமண்ணை டிப்பர் லாரியுடன், பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி