உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பழுதை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

பழுதை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த தா.அய்யம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 58. கூலித்தொழிலாளி. அவ்வப்போது எலக்ட்ரீஷியன் பணியும் செய்து வந்தார். நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை.அதனால் அருகிலுள்ள டிரான்ஸ் பார்மை ஆப் செய்து விட்டு, அங்குள்ள மின் கம்பத்தில் கோளாறை சரிசெய்ய ஏறினார். அப்போது அந்த மின்கம்பத்தின் மேல் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில், முருகனின் தலை உரசியது. இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டவர், சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். தாளநத்தம், அய்யம்பட்டி பகுதியில் ஒயர் மேன் இல்லாததால், மக்களே மின் கோளாறுகளை சரி செய்கின்றனர். அவ்வாறு சரி செய்தபோது, முருகன் பலியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை