உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணமாக வரும், 12ல், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு வரவிருக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பர்கூரில், ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை தலைமையில் நேற்று நடந்தது. பர்கூர் சிகரலப்பள்ளி மற்றும் சக்கிலிநத்தம் பகுதிகளை சேர்ந்த, அ.ம.மு.க.,வினர், 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி எம்.பி., தம்பிதுரை முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, எம்.பி., கட்சி துண்டு அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பேச உள்ள இடத்தை எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ரவிசந்திரன், அம்மா பேரவை மாவட்ட தலைவர் தங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை