உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலுமிச்சனஹள்ளியில், தேசிய ஊரக வளர்ச்சி துறை நிதியில், கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம், 13.52 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா காரிமங்கலம் பி.டி.ஓ., சர்ஹோத்தமன் தலைமையில் நேற்று நடந்தது. தி.மு.க., - எம்.பி., மணி, புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கான அரிசி, சர்க்கரை உட்பட பொருள் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதில், அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ