உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து, 'யூத் பார் மை பாரத்' எனும் தலைப்பில், சிறப்பு முகாம் துவக்க விழா பழைய தர்மபுரி பஞ்., அலுவலகம் அருகில் நேற்று நடந்தது.இதில், ஆராய்ச்சி மைய பேராசிரியர் மோகனசுந்தரம் பேசினார். சபரி செல்வராஜ், செங்கோட்டுவேலன் ஆகியோர் பாதுகாப்பான கணினி மற்றும் மொபைல் பயன்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினர். தனியார் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரசாத் பேராசிரியர்கள் ரேவதி, வித்யாசாகர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி