உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கேட்டு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுருளிநாதன் துவக்கி வைத்து பேசினார். இதில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், 63,000 காலிப்பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை தலா, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், கலந்தாய்வு மூலம், மாறுதல் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி