உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெல் நடவுக்கு உழவு பணி தீவிரம்

நெல் நடவுக்கு உழவு பணி தீவிரம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்தனர். தொடர்ந்து, நாற்று வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் மழையின்றி கடும் வெயில் அடித்ததால் நெல் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதையடுத்து, ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், நிலத்தை டிராக்டரை கொண்டு உழுது பண்படுத்தி, நாற்று பறித்து, சம்பா நடவு பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை