உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கரூர், நவ. 27-தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.அதில், 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தர்ணா போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சக்திவேல், இணை செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சோமசுந்தரம், அரசு ஊழியர் சங்க செயலாளர் பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை