மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்
நல்லம்பள்ளி, டிச. 12-தர்மபுரி மாவட்டத்தில், கடந்த வாரம் பெஞ்சல் புயலால் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் சேதமானது. அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி பஞ்., உட்பட்ட பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இதில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து பூமரத்துார் செல்லும் சாலையில் டிச., 2 அன்று சென்ற காட்டாற்று வெள்ளத்தால், தரை பாலத்தை ஒட்டிய சாலை முழுவதும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்