உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

அரூர், அரூர் அடுத்த அண்ணாலம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து, கோட்ரப்பட்டி செல்லும், 3 கி.மீ., துாரமுள்ள சாலையில், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே உள்ள பள்ளங்களில் நிலைத்தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சேதமான இச்சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ