உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிபோச்சம்பள்ளி, டிச. 11-கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி, புலியூர், களர்பதி, மிண்டிகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை, 5:00 மணி முதல், 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் வாகனங்களை முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஓட்டிச் சென்றனர். * ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, அனுமன் தீர்த்தம், கல்லாவி ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை மற்றும் வேலுார், சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாகவே ஊர்ந்து சென்றன. பனியால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை