பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். இதில், மரங்களின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சாரதா, ஆசிரியர்கள் கோவிந்தராஜ், சிவராஜ், உஷா ராணி, சரண்யா, பூமதி, பொதுமக்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவர்கள் தங்களது வீடுகளில் வேம்பு, புங்கன், காட்டு நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.