மேலும் செய்திகள்
மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
25-Jun-2025
தர்மபுரி, சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பழக்கத்திற்கு எதிரான, போலீசார் விழிப்புணர்வு பைக் பேரணி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார். மக்களிடையே போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பைக் பேரணி, தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொடங்கி, தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் முடிவடைந்தது.இதில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், மது விலக்கு அமல்பிரிவு உதவி ஆணையர் நர்மதா, போலீசார் மற்றும் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, மாணவ, மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. மாணவ, மாணவியர் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி, போதை பொருள் ஒழிப்பு கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். உடற்கல்வி ஆசிரியர் சக்திவேல், பிரேம்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
25-Jun-2025