அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியோர் மீது போலீசில் புகார்
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டியாம்பட்டி ஏரி மற்றும் மயான பகுதியில் நல்ல நிலையில் இருந்த வேம்பு, வேலான், பாதம் உட்பட்ட, ஒரு லட்சம் மதிப்புள்ள மரங்கள் சட்ட விரோத-மாக வெட்டி, சேதப்படுத்தப்பட்டு இருந்தது. பாப்பாரப்பட்டி பகுதியில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நீர்வள ஆதாரங்களை பல வருடங்களாக தொடர்ந்து பாடுபட்டு வரும் எனக்கு மிகுந்த மன வேதனையும், மன உளைச்சலுக்கு ஆளானதாக, சேலம் திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரி-வித்துள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நட-வடிக்கை கோரி, அவர் மின்னஞ்சல் மூலமாக, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.