மேலும் செய்திகள்
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
15-Dec-2024
தர்மபுரி, டிச. 22-மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று, சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி எஸ்.வி.,ரோடு, அபய ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளி ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
15-Dec-2024