உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நிழற்கூடம் கட்ட பூஜை

நிழற்கூடம் கட்ட பூஜை

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட காமராஜ் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கான்கிரீட் சாலைக்கு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கான்கிரீட் சாலைக்கு பூமிபூஜை செய்து, நேற்று தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க., ஒன்றிய தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.அதேபோல், தர்மபுரி அடுத்த, அதகபாடி பஞ்., உட்பட்ட பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியிலிருந்து, 5.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், தர்மபுரி பி.டி.ஓ., கலை-வாணி, பயிற்சி உதவி இயக்குனர் கார்த்திகா, கவுன்சிலர் வடிவேல் மற்றும் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை