தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்-தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது. முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணி நியமன ஆணை-களை வழங்கினார். இதில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலார் பசுபதி, நகர செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் பூபதி, கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.