உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் கூடுதலாக ஆதார் மையம் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அரூரில் கூடுதலாக ஆதார் மையம் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் வருவாய் உள்வட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும், தங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய, புதிய ஆதார் கார்டு பெற, அரூர் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்திற்கு வரவேண்டி உள்ளது. இங்கு, எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து, அதிகாலையில் வரும் பொதுமக்கள் மாலை வரை காத்திருக்கும் நிலையுள்ளது. இது குறித்து டி.அம்மாபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், '10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் மொபைல் எண் இணைக்க தீர்த்தமலை அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு சர்வர் பழுது என்பதால், அரூரிலுள்ள ஆதார் மையத்திற்கு வந்தோம். இங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் நாளை வாருங்கள் எனக் கூறுகின்றனர். ஆனால், பள்ளியில் ஆதார் கார்டில் இன்றுக்குள் (நேற்று, ஜன., 27) திருத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளதால், என்ன செய்வது என தெரியவில்லை என வேதனை தெரிவித்தனர். இதனிடையே மாணவ, மாணவியரின் சிரமத்தை போக்கும் வகையில், பள்ளிகளில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். கூட்ட நெரிசலை குறைக்க, அரூரில் கூடுதலாக, ஆதார் மையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை