மேலும் செய்திகள்
தர்மபுரியில் சதம் அடித்த வெயில்
29-Mar-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட ராகி அறுவடையில், விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு காரிப் பருவத்தில், 9,261 ஹெக்டேரில், ராகியை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். கடந்தாண்டு டிச., தொடக்கத்தில் பெஞ்சால் புயல், மழையால், ராபி பருவ ராகி சாகுபடி அதிகரித்தது. இந்நிலையில், நடப்பு ராபி பருவத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம் உட்பட மாவட்டத்தில், 10,244 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள், ராகி பயிரிட்டனர். தற்போது, விவசாயிகள், ராகி அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், தர்மபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ராகி கொள்முதல் கடந்த டிச., மாதம் முதல் நடந்து வருகிறது. இதில், ஏப்., 10 வரை, 44 டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராகியை விவசாயிகளிடமிருந்து, கிலோவுக்கு, 42.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் அதை பயன்படுத்தி கொள்ள, வேளாண் ஒழுங்குமுறை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29-Mar-2025