உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முள்ளங்கி விலை உயர்வு கிலோ ரூ.24க்கு விற்பனை

முள்ளங்கி விலை உயர்வு கிலோ ரூ.24க்கு விற்பனை

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். விதை நடவு செய்த பின், ஒன்றரை மாதத்தில் முள்ளங்கியை அறுவடை செய்ய முடியும். குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், விவசாயிகள் பலர் முள்ளங்கி சாகுபடி செய்கின்றனர். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முள்ளங்கிக்கு கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மார்கெட்டுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், 10 நாட்களாக முள்ளங்கி விலை கணிசமான அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. கடந்த, 15ல் கிலோ முள்ளங்கி, 20 ரூபாய் என விற்பனையானது. நேற்று முன்தினம் கிலோ முள்ளங்கி, 22, நேற்று, 24 ரூபாய் என விற்பனையானது. இதனால், முள்ளங்கி நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்