| ADDED : ஜூலை 04, 2024 06:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி அரசு பழங்குடியினர் நல மேல் நிலைப்பள்ளியில் படித்து இடைநின்ற, 10 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நலத்-திட்ட அலுவலர் கண்ணன் தலைமையில், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பிரபாவதி, சித்தேரி வி.ஏ.ஓ., தினகரன், பட்டதாரி ஆசிரியர் சின்னசாமி ஆகியோர், நேற்று சித்தேரி மலைகி-ராமங்களான கல்நாடு, எருமைக்கடை, மண்ணுார், முள்ளேரிகாடு, சித்தேரி உள்ளிட்ட மலை கிராமங்களில் கள ஆய்வு செய்தனர்.இதில், 4 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரி சேர்ந்து படிப்பதும், 4 மாணவர்கள் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றதும், ஒரு மாணவர் தற்போது சிறப்பு தேர்வுக்கு படித்து வருவதும் தெரிய வந்தது. கல்நாடு பகுதியில் இடைநின்ற ஸ்ரீகாந்த் என்ற மாணவரை அவர்களின் பெற்-றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.