அகில இந்திய வானொலியில் பகுதி நேர தொகுப்பாளருக்கான தேர்வு
அகில இந்திய வானொலியில்பகுதி நேர தொகுப்பாளருக்கான தேர்வுதர்மபுரி, நவ. 1-அகில இந்திய வானொலி நிலையம், பண்பலை, 102.5ல் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதிநேர தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கதப்பட உள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரியில் உள்ள, அகில இந்திய வானொலி நிலையத்தில், நிகழ்ச்சிகளை அறிவித்து, தொகுத்து வழங்க, பகுதிநேர தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளனர். இதில், 2024 ஆண்டு நவ.,1 அன்று, 20 வயது முதல், 50 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்தவராகவும், பள்ளி படிப்பில் தமிழை, ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, ஒளிபரப்பில் ஆர்வம், பொது அறிவுத்திறன் பெற்றிருத்தல் அவசியம்.விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி பண்பலை, 102.5 அதியமான்கோடை, தர்மபுரி, அல்லது ஆகாஷ்வாணி தர்மபுரி, என்ற முகநுால் முகரியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.