உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தெருவில் இருந்த புற்கள் அகற்றம்

தெருவில் இருந்த புற்கள் அகற்றம்

அரூர்: அரூர் டவுன் பஞ்., 6வது வார்டுக்கு உட்பட்ட ஜெயபால் தெருவில், பொதுகுடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை நடுவே குழிதோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. அங்கு எவ்வித துாய்மை பணிகளும் மேற்கொள்ளப்படாததால், சாலையில், புற்கள் வளர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. மேலும் அங்குள்ள, கால்வாயில் கழிவுநீர் அகற்றப்படாமல் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்த செய்தி கடந்த, 16ல் காலைக்கதிர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் தெருவில் வளர்ந்திருந்த புற்களை துாய்மை பணியாளர்கள் அகற்றினர். இந்நிலையில், தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதுடன், சேதமடைந்துள்ள சாலையையும் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை