உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை

மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, 2 ஆண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட, 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காததால், பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்., மேல் ஈசல்பட்டி, கீழ்பூரிக்கல், பெருமாள் கோவில், மந்தமேடு ஆகிய, 4 இடங்களில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கடந்த, 2 ஆண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து, தயார் நிலையில் இருந்தும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. குடிநீர் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்துவதை தவிர்த்து, பொதுமக்களின் நலன் கருதி, குடிநீர் இணைப்பை உடனடியாக வழங்க, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை