சாலையோர கடைகளை அகற்ற கோரிக்கை
அரூர்: அரூரில், திங்கட்கிழமையில் வாரச்சந்தை நடக்கிறது. கடைவீ-தியில் இருந்து, பழையபேட்டை வாணியாறு பாலம் வரை, நடை-பாதைகளில் தள்ளுவண்டி, காய்கறி கடைகள் என, சிறு வியாபா-ரிகள் பலர் ஆக்கிரமித்து கொள்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், எந்த நேரமும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், பொதுமக்களும், இருசக்-கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையோர கடைகளை அகற்றுவதுடன், சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கடைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.