உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று காலை முதல், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவன் முன்னிலை வகித்தார்.இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். மூன்றாண்டுக்கு உட்பட்ட, 546 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் குறுகியகால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து வாரத்திற்கு, 2 முகாம்கள் மட்டும் நடத்த வேண்டும். இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவை வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' உள்ளிட்ட அரசு சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும், புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் தாசில்தார், ஆர்.டி.ஓ., மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடியது.* அரூர் தாலுகா அலுவலகத்தில், அலுவலர்கள் யாரும் இல்லாததால், அலுவலகம் வெறிச்சோடியது. பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.* பாப்பிரெட்டிப்பட்டியில், நேற்று முதல், தற்செயல் விடுப்பு எடுத்து, 48 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டதால், தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது.* கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெருமாள் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை