உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

தர்மபுரி, தர்மபுரி அருகே, அன்னசாகரம் பகுதியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை யால், வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகின்றனர். தர்மபுரி அடுத்துள்ள அன்னசாகரம் முதல் வெங்கடம்பட்டி செல்லும் சாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வெங்கடம்பட்டி, எட்டிமரத்துப்பட்டி, காரஓனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், தர்மபுரி டவுன் பகுதிக்கு வருவதற்கு அன்னசாகரம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாக வழித்தடம் எண், 47 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை ஆங்காங்கே சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மழை பெய்யும் சமயத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்களில், மழைநீர் தேங்கி நிற்பதால், அதில், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி