தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, போக்குவரத்து துறை சார்பாக, ஆர்.டி.ஓ., தாமோதரன் தலை-மையில், தர்மபுரி பிரேக் இன்ஸ்பெக்டர் தரணீதர், பாலக்கோடு வெங்கிடுசாமி, அரூர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.இது குறித்து, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ-தரன் கூறியதாவது:: மொத்தம், 7,589 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 2,984 வாகனங்களுக்கு அறிக்கை வழங்கப்பட்-டன. இதில், பல்வேறு குற்றங்களுக்காக, 356 வாகனங்கள் சிறை-பிடிக்கப்பட்டன. இதில், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள், 155, அதிக பாரம் ஏற்றியது, 86, அனுமதி -சீட்டு இல்லாமல் இயக்கிய, 97, அதிவேகமாக வாகனங்களை இயக்கிய, 1,201, தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய, 195, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய, 556, சிகப்பு நிற பிரதிப-லிப்பான் இல்லாமல் இயக்கிய, 352, சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய, 211 வாகனங்களுக்கும் வாகன தணிக்கை-யின்போது, அபராதம் விதிக்கப்பட்டது.சோதனையின் மூலம் அரசுக்கு சாலை வரியாக, 32.68 லட்சம் ரூபாய், இணக்க கட்டணமாக, 36.83 லட்சம் ரூபாய் என, ரூ.69.51 லட்சம் உடனடியாக வசூலிக்கப்பட்டது. அரசுக்கு வாகன சோதனை மூலம், 1.43 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்-பட்டுள்ளது. மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்-பட்ட வேக வரம்பான, 30 கி.மீ.,க்கு மேல் இயக்கிய வாகனங்க-ளுக்கு போக்குவரத்து துறையின், ஸ்பீட் ரேடார் கன் உதவியுடன் கடந்த, 3 ஆண்டுகளில், 13,177 வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம், 95.46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.