உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டுச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஓட்டுச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தர்மபுரி : தர்மபுரி லோக்சபா தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.தர்மபுரி, லோக்சபா தொகுதியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டூர் என, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 1,489 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளிலுள்ள, மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, தர்மபுரி தாசில்தார் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பாக லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், ஓட்டு போடும் போது தேவையான வாக்காளர் பட்டியல், படிவங்கள், அழியா மை போன்ற அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணிகளை தர்மபுரி டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., காயத்திரி ஆகியோர் அரசியல் கட்சியினர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்