உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 10 யூனியன்களில் பாப்பிரெட்டிப்பட்டி யூனியன், தி.மு.க., வசம் உள்ளது. இது, 19 பஞ்.,க்களையும், அதிக மலைவாழ் மக்களையும் கொண்டது. இந்த யூனியன் அலுவலகத்துக்கு பஞ்., தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லை.பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல், யூனியன் அலுவலகம் முட்புதர்களால் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.அலுவலகத்தில் போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால், அரசு ஊழியர்களே திறந்தவெளியில்தான் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளது. சிலர் யூனியன் வளாகத்தை மது பாராக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த அலுவலகம் வரவே பெண்கள் அச்சப்படுகின்றனர். யூனியன் அலுவலகத்திலுள்ள முட்புதர்களை அகற்றி, சுகாதார சீர்கேட்டை தடுத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை