உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.20 லட்சத்தில் பள்ளி கட்டடம் திறப்பு

ரூ.20 லட்சத்தில் பள்ளி கட்டடம் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காட்டில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட பழங்குடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியை சீனிவாசா அறக்கட்டளை தத்தெடுத்தது.அதன் சார்பில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டும், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் அமைத்தும், பழைய பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு செய்தும் கொடுக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கள இயக்குனர் ஜெயபால், சமுதாய மேம்பாட்டு பணியாளர் அன்ன லட்சுமி, கிராம வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ரம்யா உள்ளிட்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ