உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

புகையிலை பொருள்விற்ற கடைக்கு 'சீல்'அரூர், நவ. 10-தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டையில் ராஜேஸ்வரி, 55, என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த, 2ல் அரூர் எஸ்.எஸ்.ஐ., பெருமாள் மற்றும் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, நேற்று அரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மளிகை கடைக்கு, 'சீல்' வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை