உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் கருத்தரங்க பயிற்சி வகுப்புகள்

அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் கருத்தரங்க பயிற்சி வகுப்புகள்

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர்களுக்கு, ஆலோசனை கருத்தரங்க பயிற்சி வகுப்புகள் நடந்தன.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, 'மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்' என்ற தலைப்பில், மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கி பேசினார். எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் கிருஷ்ணன், இன்றைய சமுதாய சூழ்நிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அதை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி விளக்கி கூறினார். துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், சரளா, வித்யா, ஆசிரியைகள் விஜயலட்சுமி, ஜஸ்டினா, பார்கவி உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமையில், அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியருக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில் முதலிடம் பெற்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு மாணவர் ஆதித்யா, இரண்டாமிடம் பெற்ற, 3ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவி ஜான்சி ராணி, மூன்றாம் பரிசு பெற்ற, 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி திரிஷா ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி