தரமற்று அமைத்த சிமென்ட் சாலை சேதத்தை தவிர்க்க வேகத்தடைகள்
அரூர்: அரூர் டவுன் பஞ்., மேல்பாட்சாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வேகத்-தடை இருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. சிமென்ட் சாலை தரமற்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அவை சேதமடை-வதை தவிர்க்கவே விதிமுறைகளை பின்பற்றாமல், வேகத்த-டைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், மேல்பாட்சாபேட்டை பிள்-ளையார் கோவில் தெருவில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்-டது. தரமற்ற முறையில் சாலை அமைத்ததால், வழக்கமான வேகத்தில் வாகனங்கள் சென்றால், சாலை விரைவில் சேதம-டைந்து விடும் என்பதால், அதை தவிர்க்க, 1,500 மீட்டர் துார-முள்ள சாலையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் விதிமுறை-களை பின்பற்றாமல் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக செல்கின்றனர். இருந்த போதிலும் மிகவும் தரமற்ற முறையில் சாலை அமைத்-துள்ளதால், பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. அரூர் டவுன் பஞ்.,ல் இதே முறையை பின்பற்றி தற்போது, பல்வேறு இடங்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, அதில் வேகத்த-டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் தர-மான முறையில், சிமென்ட் சாலை அமைப்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.