உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சரக தடகள போட்டிகளில் சாதனை

ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சரக தடகள போட்டிகளில் சாதனை

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் சரக தடகள விளையாட்டு போட்-டிகள் மொரப்பூர் ஜீனோ இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்-நிலைப்பள்ளி மாணவர்கள், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கார்த்திகேயன், 100 மீ., ஓட்டம், தட்டு மற்றும் குண்டு எறிதலில் முதலிடம் பிடித்தார். ஹரிதாஸ் தட்டு எறிதல் போட்டியில், 2ம் இடமும், குண்டு எறிதலில், 3ம் இடமும் பெற்றார். இத‍ே பிரிவில் தட்டு எறிதலில் மாணவி ரீனா முதலிடம், அனுஷ்கா மூன்றாம் இடம் பெற்றனர். மேலும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், விவின்-குமார், 100 மீ., ஓட்டத்தில், 2ம் இடம், 110 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதலில், 2ம் இடம் பிடித்தார். மாணவியர் பிரிவில் மோனிஷா, 100 மீ., தடை தாண்-டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் முத-லிடம் பெற்றார். ரவீனா குண்டு மற்றும் தட்டு எறிதலில் முத-லிடம், ஈட்டி எறிதலில், 2ம் இடம், கேஷவர்தினி, 100 மீ., ஓட்டம், தடை தாண்டும் ஓட்டத்தில், 3ம் இடம் பெற்றார். தொடர்ந்து, 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் மாணவர், மாணவியர் சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, திருப்பதி, தினேஷ், அருண்பிரசாத் ஆகியோரை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடி-யப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் சாரதி மகா-லிங்கம், ஜான் இருதயராஜ் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !