உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த, எஸ்.எஸ்.ஐ., உடல், 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் சாதிக், 56. இவர், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். கடந்த, 4 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடலுக்கு டி.எஸ்.பி.,க்கள் அரூர் ஜெகநாதன், தர்மபுரி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், வான்மதி உள்ளிட்ட போலீசார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மதியம் 1:00 மணியளவில், எஸ்.எஸ்.ஐ., சாதிக் உடல், வெங்கடசமுத்திரம் இஸ்லாமியர் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு, எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார், 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன், உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1988 ல் பணியில் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., சாதிக், 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவருக்கு அப்ரோஸ் என்ற மனைவியும் யாசின், ஹசீடு, ஷாகுல் என, 3 மகன்களும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை