பள்ளப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சியில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் பட்டா மாற்றம், ஜாதி சான்று, பென்ஷன் பெறுதல், காப்பீடு அட்டை பெறுதல், ஆதார் அட்டையில் திருத்தங்கள், குடும்ப அட்டையில் முகவரி திருத்தம் செய்தல் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3, 4, 5, 6, 7 வார்டு மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை தேவையான சான்றுகளை இணைத்து கணினியில் பதிவேற்றம் செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன், நகராட்சி கமிஷனர் ஆர்த்தி, பள்ளப்பட்டி தி.மு.க., நகர செயலாளர் வாசிம் ராஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.