| ADDED : மே 09, 2024 06:06 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி தர்ஷினி ஸ்ரீ, 578 மதிப்பெண்களும், மாணவர் எபினேசர், 565 மதிப்பெண்களும், மாணவர் அஸ்வின், 561 மதிபெண்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில், 100க்கு, 100 மதிப்பெண்களை, 2 மாணவர்களும், 25 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்தவில் அனைத்து மாணவ, மாணவியரும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 46 ஆண்டுகளாக இப்பள்ளி பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகிறது. இத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.