காய்ச்சலில் மாணவன் சாவு
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பெருமாள் கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலவிக்னேஷ், 19. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 5 அன்று முதல் சளி, காய்ச்சல் பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு உடல்நிலை பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக விக்னேஷை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பாலவிக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.