ஜன.,4ல் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
தர்மபுரி: 'முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் போட்டி நடக்கி-றது' என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, தர்மபுரி பிரிவு சார்பில் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் போட்டிகள் நடத்தப்-பட உள்ளன. அதன்படி அண்ணா விரைவு சைக்கிள் போட்டி வரும் ஜன., 4ல், காலை, 7:00 மணிக்கு துவங்க உள்ளது. தர்ம-புரி பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி முன் இருந்து இந்த போட்டிகள் துவங்குகிறது. இதில், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ.,- மாணவியருக்கு, 10 கி.மீ., துாரம் கொண்ட போட்டி நடக்கிறது. இதேபோல், 15 வயதுக்குட்பட்ட மாணவர்க-ளுக்கு, 20 கி.மீ.,- -மாணவியருக்கு, 15 கி.மீ., துாரமும், 17 வய-துக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., மாணவியருக்கு, 15 கி.மீ., துார சைக்கிள் போட்டியும் நடக்க உள்ளது. மாவட்ட அளவில் நடக்க உள்ள இந்த போட்டி-களில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்க-னைகளுக்கு முறையே தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும், 4 முதல், 10 இடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா, 250 ரூபாய் வழங்கப்படும். இப்-போட்டியில், இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள் கொண்டு வருவோர் மட்-டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.