கரும்புக்கு ரூ.4,000 கிடைக்க வாய்ப்பு சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., தகவல்
தர்மபுரி: பாலக்கோடு சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024 - 20-25ம் ஆண்டின் நடவு பருவம் துவங்கி, நடவு பணி நடக்கிறது. நடப்பு ஆண்டில் ஆலை அரவைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிக-ளுக்கு டன் ஒன்றுக்கு, 3,350- ரூபாய் ஆதார விலையுடன், தமிழக அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு, 349- ரூபா-யுடன் சேர்த்து, டன் ஒன்றுக்கு, 3,699- ரூபாய் வழங்கப்பட உள்-ளது. நடப்பாண்டில், கரும்பு நடவு செய்து, பதிவு செய்யும் விவ-சாயிகளுக்கு எதிர்வரும் ஆண்டு, கரும்பு கிரையத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து, டன் ஒன்றிற்கு, 4,000 ரூபாய்- கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கரும்பு புதிய நடவு செய்யும் விவசாயிகளுக்கு, கலை-ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், பரு-சீவல் நாற்று நடவு செய்ய ஏக்கர் ஒன்றிற்கு, 5,000 ரூபாய், ஒரு பரு கரணை நடவு செய்ய ஏக்கருக்கு, 1,500- ரூபாய், வல்லுனர் விதைக்கரும்பு நடவிற்கு ஏக்கருக்கு, 5,000 ரூபாய், திசு வளர்ப்பு நாற்று நடவு ஏக்கருக்கு, 36,000 ரூபாய், 42 அடி அகலப்பார் அமைத்து, கரும்பு நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்க-ருக்கு, 1,000 ரூபாய் மற்றும் மறுதாம்பு பயிரில் சோகை பொடி-யாக்க ஏக்கருக்கு, 800 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகி-றது.எனவே, அனைத்து கரும்பு விவசாயிகளும் தண்ணீர் இருப்-பிற்கு ஏற்ப, கரும்பு நடவு செய்து, பாலக்கோடு கூட்டுறவு சர்க்-கரை ஆலைக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்-துள்ளார்.