உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்

நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்

தர்மபுரி: தமிழக விவசாயிகள் சங்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், குப்புசாமி, பொருளாளர் பழனி முன்னிலை வகித்தனர். கரும்பு பிரிவு செயலாளர் லோக-நாதன் வரவேற்றார். இதில், தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் சின்னசாமி தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். பால் கொள்முதலுக்கானஊக்கத்தொகையை பால் ஊற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி, தி.மு.க., அரசு கரும்பு டன்னுக்கு நடப்பு ஆண்டுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையிலுள்ள, எண்ணேகோல் புதுார் கால்வாய் திட்டம், தும்-பலஹள்ளி கால்வாய் திட்டம், அழியாளம் -துாள்செட்டி ஏரி கால்வாய் திட்டம், புளிக்கரை கால்வாய் திட்டம், ஒகேனக்கல் காவிரி உபரி நீர் நீரேற்றம் செய்து, தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் திட்டம் மற்றும் ஈச்சம்பாடி அணை-யிலிருந்து நீரேற்று திட்டத்தின் மூலம், 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் நடராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ