உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.36.62 கோடியில் கட்டிய கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வர் திறப்பு

ரூ.36.62 கோடியில் கட்டிய கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வர் திறப்பு

தர்மபுரி, தர்மபுரியில், 36.62 கோடி ரூபாய் மதிப்பில், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தை, காணொலி காட்சி மூலம், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தர்மபுரி கலெக்டர் சதீஸ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் கட்டி, 58 ஆண்டுகள் ஆகிறது. இதில், 34 துறைகள் இயங்கி வரும் நிலையில், ஒரே கட்டடத்தில் அனைத்து துறைகளும் இயங்க, கூடுதல் கட்டடம் தேவைப்பட்டதால், பழைய ஆர்.டி.ஓ., ஆபீஸ் மைதானத்தில், 4.25 ஏக்கரில், 36.62 கோடி ரூபாய் மதிப்பில், 5 தளங்களுடன் கூடிய, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. நேற்று காலை, 9:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கபட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், காலை, 11:15 மணிக்கு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில், தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, பா.மக.,- - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, டி.எப்.ஓ., ராஜாங்கம், நகராட்சி சேர்மன் லட்சுமி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ