மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
7 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
7 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
7 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
அரூர்: தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் இருந்து கலசப்பாடிக்கு மலைப்பாதையில் சாலை அமைத்து தரக்கோரி, நேற்று காலை, அரூர் - சேலம் சாலையில், கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில், கலசப்பாடி, அரசநத்தம் மலை கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் என, 600க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் ஆர்.டி.ஓ. வில்சன் ராஜசேகர், எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது. தொடர்ந்து மாலை எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் நடத்திய பேச்சில், வரும், 8ல் கலெக்டரை கிராம மக்கள் சந்தித்து பேச முடிவானதால், மறியல் கைவிடப்பட்டது.நான்கு தலைமுறைகளாக சாலை வசதிக்கு போராடுவதாக கூறிய மலைவாழ் மக்கள், தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், யாரும் பெண் கொடுப்பதில்லை. கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மருத்துவமனை செல்ல முடியவில்லை; மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல முடியவில்லை என, தெரிவித்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
01-Oct-2025