| ADDED : பிப் 17, 2024 12:38 PM
தர்மபுரி: தர்மபுரியில், நான்கு கடைகளின் மேற்கூரையை உடைத்து, 3.10 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது, தர்மபுரி நகரில் தொடர் திருட்டு சம்பவத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தர்மபுரி, எஸ்.வி.,ரோடு போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி நேற்று முன்தினம் இரவு இரண்டு பாத்திரக்கடைகள், ஒரு மெடிக்கல் ஸ்டோர், பைக் ஸ்பேர்ஸ் கடை உள்ளிட்ட நான்கு கடைகளில் மேற்கூரையை உடைத்து சிலர் பணத்தை திருடியுள்ளனர். கடை உரிமையாளர்கள், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தனர்.இதில், நான்கு கடைகளில் ஒட்டு மொத்தமாக, 3.10 லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது.கடைகளில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், தர்மபுரி நகரை ஒட்டியுள்ள குண்டலபட்டி, சோகத்தாரில் கடந்த, 14 இரவு ஏழு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.