மேலும் செய்திகள்
முயல் வேட்டைக்கு முயற்சி; தொழிலாளிக்கு அபராதம்
31-May-2025
திமுக மாநில நிர்வாகி உட்பட 7 பேருக்கு தண்டனை! |
09-Jun-2025 | 1
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை காப்புக்காடு, அம்மா குட்டை ஆலமர சராக பகுதியில், கடந்த, 14ல் தீர்த்த-மலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, பையர் நாயக்கன்பட்டியை சேர்ந்த பச்சியப்பன், 60, சேட்டு, 61, தேவராஜ், 58, ஆகிய, மூவரும் கொடுவாள்களுடன் அத்துமீறி நுழைந்து, பச்சை மூங்கில்களை வெட்டி, பிளந்து தப்பைகளாக மாற்றி, படல்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்து-றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மூவருக்கும், தலா, 10,000 ரூபாய் வீதம் என, மொத்தம், 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர-விட்டார்.
31-May-2025
09-Jun-2025 | 1