உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேர் சிக்கினர்

செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேர் சிக்கினர்

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி, மத்துார் ஆகிய போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு குற்றச்செயல்கள் நடப்பதாக புகார் சென்றது. அதன்படி ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவின்படி தனிப்படை எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில், போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். நேற்று, ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பதிலால் சந்தேகமடைந்த போலீசார், போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி வைரக், 23, பட்டகபட்டி ஜனா, 21, கொல்லஅள்ளி திவாகர், 30, என தெரிந்தது. மூவரையும் சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்